அன்புள்ள டைரி ,
இன்று எனது பெற்றோரை பற்றி கூற விரும்புகிறேன். என் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். இருவருமே பல்கலைகழகத்தில் பயின்ற பட்டதாரிகள். நான் பல்கலைக்கழகம் வர வேண்டும் என எண்ணியதற்கு காரணமும் இவர்களே. எப்பொழுதுமே எனக்கு என்றென்றும் எனது முன்னோடியாக இருப்பது என் தந்தைய்யே. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, ஓர் ஆசிரியராக eப்படி ஒரு மனிதர் இருக்க வேண்டுமோ அதற்கெல்லாம் பொருந்தியவராக என் தந்தை அமைந்திருக்கிறார். என் தாயாரும் தந்தையும் ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தவர்கள். என் தந்தை தன் சொந்த முயற்சியால்தான் வாழ்கையில் முன்னேறினர். என் தந்தையின் தந்தை இறந்த பின் குடும்பத்தின் மொத்த சுமையையும் சுமந்தவர். தம்பி தங்கைகளை படிக்க வைத்து, ஓர் நல்லகுடும்பத்தில் திருமணமும் செய்து வைத்தார். தனது 30 வது வயதில் என் தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது என் தாயாரின் வயது 20. என் தாயாரை வளர்த்து வந்தது அவரின் அண்ணன். spm தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற போதிலும் குடும்ப சூழ்நிலையால் இளம் வயதிலே திருமணம் சித்து கொண்டார். இருந்த போதிலும் என் தந்தை என் தாயாரை ஆசிரியர் கல்லூரியில் படிக்க வைத்தார். பின்பு எனது 14 வது வயதில் என் தாயாரை மலாயா பல்கலைகழகத்தில் பயில வைத்தார். ஒரு வருடம் பினாங்கில் பயில வேண்டியதால் அவர் அங்கேயே தங்கி விட்டார். என் தந்தை தன் என்னையும் என் இரு தம்பிகளையும் பராமரித்து வந்தார். அப்பொழுது அவர் பட்ட கஷ்டங்களை வார்த்தையால் கூற என்னால் முடியாது. இருந்த போதிலும் எங்களிடம் அதை கட்டிக் கொள்ளாமல் அன்புடன் நடந்து கொண்டார். என்னிடம் திறமைகள் இருப்பது என்றால் அதற்க்கு காரணம் என் தந்தையே. நான் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்திற்கு வர வேண்டும் என நினைப்பரும் என் தந்தையே. எனது ஆயுளை சமர்பனமாக வைத்தாலும் அவரிடம் நான் பெற்ற கடனை அடக்க முடியாது. எனக்கு அமைய விருக்கும் என் அதிர்களா கணவரும் என் தந்தையை போல இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். மீண்டும் அடுத்த டைரியில்.
அன்புடன் மாயா.