NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Showing posts with label எனது டைரி. Show all posts
Showing posts with label எனது டைரி. Show all posts

Monday, July 26, 2010

Thursday, May 14, 2009

Yesterday 13.05.09

As usual today i have opened my tv and was watching the astro programmes... clock struck 9 then my hand has turned the channel to astro vaanavil... an in house programme called ivargalum herothan on air... Today's programme was on a life of blindman... the story has touched my heart... so i want to share this story with my friends here... The man is not blind by nature but have been slapped by his teacher when 8 years old.. so from tat time on he has been facing tis problem. Later when 11 years old he has been transfered to blind school and there is the place where he met his wife who is also a blind. They have married although has objection from their family but they have survived. They are gifted with 2 children and they are in a good position now. The man is still working goin to office and work as a telephone operator in a company although has been retired. this story has inpired me to not to be down in watever situation tis remind me the story of abraham lincoln who has been failed 49 times before turn to be a prime minister.. when people asked about tat he said if he won in his first attempt he woulndnt end up in tis position and will b stop there... wat an inspiring story... k bye

Monday, May 11, 2009

Tears

the days tat i am spending now is accomponied by tears... i dun kno to whom to tell and to cry out whatever i am facing now... i need sumone's shoulder to cry... i need sumone to wipe my tears.... i need sumone to be with me all the time... i need sumone to take care of me... i need sumone to love me and b with me life long.... but i kno it is impossible for me to search for tat person.... but i believe in faith and god.... pls do sumtin... i am dying nw........ plssss

Thursday, December 18, 2008

டைரி 3


அன்புள்ள டைரி ,

இன்று எனது பெற்றோரை பற்றி கூற விரும்புகிறேன். என் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள். இருவருமே பல்கலைகழகத்தில் பயின்ற பட்டதாரிகள். நான் பல்கலைக்கழகம் வர வேண்டும் என எண்ணியதற்கு காரணமும் இவர்களே. எப்பொழுதுமே எனக்கு என்றென்றும் எனது முன்னோடியாக இருப்பது என் தந்தைய்யே. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, ஓர் ஆசிரியராக eப்படி ஒரு மனிதர் இருக்க வேண்டுமோ அதற்கெல்லாம் பொருந்தியவராக என் தந்தை அமைந்திருக்கிறார். என் தாயாரும் தந்தையும் ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தவர்கள். என் தந்தை தன் சொந்த முயற்சியால்தான் வாழ்கையில் முன்னேறினர். என் தந்தையின் தந்தை இறந்த பின் குடும்பத்தின் மொத்த சுமையையும் சுமந்தவர். தம்பி தங்கைகளை படிக்க வைத்து, ஓர் நல்லகுடும்பத்தில் திருமணமும் செய்து வைத்தார். தனது 30 வது வயதில் என் தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது என் தாயாரின் வயது 20. என் தாயாரை வளர்த்து வந்தது அவரின் அண்ணன். spm தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற போதிலும் குடும்ப சூழ்நிலையால் இளம் வயதிலே திருமணம் சித்து கொண்டார். இருந்த போதிலும் என் தந்தை என் தாயாரை ஆசிரியர் கல்லூரியில் படிக்க வைத்தார். பின்பு எனது 14 வது வயதில் என் தாயாரை மலாயா பல்கலைகழகத்தில் பயில வைத்தார். ஒரு வருடம் பினாங்கில் பயில வேண்டியதால் அவர் அங்கேயே தங்கி விட்டார். என் தந்தை தன் என்னையும் என் இரு தம்பிகளையும் பராமரித்து வந்தார். அப்பொழுது அவர் பட்ட கஷ்டங்களை வார்த்தையால் கூற என்னால் முடியாது. இருந்த போதிலும் எங்களிடம் அதை கட்டிக் கொள்ளாமல் அன்புடன் நடந்து கொண்டார். என்னிடம் திறமைகள் இருப்பது என்றால் அதற்க்கு காரணம் என் தந்தையே. நான் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்திற்கு வர வேண்டும் என நினைப்பரும் என் தந்தையே. எனது ஆயுளை சமர்பனமாக வைத்தாலும் அவரிடம் நான் பெற்ற கடனை அடக்க முடியாது. எனக்கு அமைய விருக்கும் என் அதிர்களா கணவரும் என் தந்தையை போல இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். மீண்டும் அடுத்த டைரியில்.

அன்புடன் மாயா.

டைரி 2


அன்புள்ள டைரி,

என் சுயசரிதையை தொடர்வதற்கு முன் மாயா என்ற இந்த புனைபெயரை என் நிழல் பெயராக உபயோகப் படுத்தப் பட்டத்தின் நோக்கத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன். மாயா என்ற பெயரில் என் நிஜப் பெயரும் அடங்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகா ஏற்றிருந்த வேடம் எனை ஈர்த்துள்ளது மற்றுமொரு காரணம் என்றும் கூறலாம். ஒரு பெண் ஒரு முறை ஒரு வரை நேசித்தால் அவரை திருமணம் செய்து கொள்வாள் என்றும், மனதில் விரும்பியவருடன் ஒரு நாள் வாழ்ந்தாலும் ஒரு பெண்ணுக்கு போதுமானது என்றும் இந்த கதாபத்திரம் உணர்த்துகிறது, இதுவே என் கொள்கையும் ஆகும். அன்புடன் மாயா.

Sunday, December 14, 2008

டைரி 1

அன்புள்ள டைரி,

வாழ்கையில் பல நிலைகளை கடந்து வந்த எனக்கு இந்த கல்லூரி வாழ்க்கை ஓர் புதிய அனுபவத்தை தந்தது. பள்ளியில் பயிலும் பொழுது அறியாத பல அறிய விஷயங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்தக் கல்லூரி. பல தரப்பட்ட மனிதர்களை இங்கு நான் காண்கிறேன், சொன்னால் நேரம் போதாது. எத்தனை விதமான மனிதர்கள், பல தடவை உண்மை என்று நம்பி நிழலை தொடர்ந்திருக்கிறேன்... இனி வரும் காலங்களில் என் வாழ்வில் நடந்த சில முக்கியமான விஷயங்களை நினைவுகள் எய்தும் பொழுது இந்த டைரியை நிரப்புகிறேன். இப்பொழ்து விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம். அன்புடன் மாயா.