நீ
எடுக்கும்போது தவறவிட்டவை
அள்ளும்போது சிந்தியவை
பயனில்லையென எறிந்துபோனவை
யாவையும்
சேமித்துவைத்திருக்கிறேன்
இந்த மலையடிவாரத்தின்
நீரோடைக்கரையில்
நந்தவனங்களான
குடிலில்.
பூமி உருண்டையென
நிரூபணமாயிருப்பதால்
நீயும் திரும்புவாய்
ஒருநாள்
உன் நிராகரிப்பை
நிராகரித்து.
:: Welcome ::
Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!
Tuesday, July 21, 2009
சுழற்சி
Subscribe to:
Posts (Atom)