NUFFNANG

:: Welcome ::

Vanakkam and welcome to my own blog. This blog contains my own creations, my thoughts, my favourites and etc etc. any comments e-mail me at maya5318@gmail.com. Take care and happy alwayz!!!!





Thursday, November 26, 2009

உன்னோடு .....

உன்னோடு
பேசிய பிறகு...

யாரோடும்
பேச பிடிக்கவில்லை..

நீ பேசியபின்தான்
தமிழ்...

கன்னித்தமிழானது..!

என் கனவுகளில்

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

காதல் கவிதை

நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும்

இறந்து போனவைகளை
உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில்
உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள்
"மழை பெய்ய செய்வேன்..!!"

vendum varangal

1 dinam dinam pavurnamy
2 ninaitha udan mazhai
3 saalaiyora pookkal
4 athi kaalai panithuli
5 iravu nera mellisai
6 kallamilla sirippu
7 poiyilla natpu
8 dinam nooru kavithaikal
9 meendum oru palli paruvam
10 thozh saaya thozhi
11 uyir kodukkum thozhan
12 thai madi thookkam
13 thookkathil maranam.

Thursday, October 22, 2009

I'M Back

It seems to be a long time i didn blog.... nyway i m back to the track...... so many things happened in my life unexpectedly this semester.... watever it is as for me life has to go on......

Friday, August 21, 2009

தனிமை...

எப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கும்
ஏனென்றால்...
தப்பாமல் வந்து என்னைச் சந்தோசப்படுத்துபவன் நீ
எந்நாளும் என் மேல் இரக்கப்படுபவனும் நீ
காதலன் எனச்சொல்லி உன்னை களங்கப்படுத்தமாட்டேன்
ஆனாலும் உன்னோடு ஒட்டி இருப்பதனால்
'அரைலூஸ்' என்றும் என்னை அழைப்பார்கள்
வீட்டிலுள்ளோர்

உன் கையைப் பிடித்துத்தான் நான்
பல உணர்வகளோடு கலந்திருக்கிறேன்
இதுவரை அனுபவித்திராத பல இன்பத்தையும்...
துன்பத்தையும்...
நீ தான் எனக்குக்
காட்சிப்படுத்தினாய் என் முதல் தோழன்
தனிமையே நீ தானே....

ஞாபகங்கள்

கதவு ஜன்னல்களை இறுக மூடிவிட்டுத்தான் கண்ணயர்ந்தேன்.................... அதையும் தாண்டி உதைக்கின்றன உண் ஞாபகங்கள்...............

உறங்காமல் நான்

உறங்கவிடமல் நீ...........................!!!!!!!!!!

Tuesday, July 21, 2009

சுழற்சி

நீ
எடுக்கும்போது தவறவிட்டவை
அள்ளும்போது சிந்தியவை
பயனில்லையென எறிந்துபோனவை
யாவையும்
சேமித்துவைத்திருக்கிறேன்
இந்த மலையடிவாரத்தின்
நீரோடைக்கரையில்
நந்தவனங்களான
குடிலில்.

பூமி உருண்டையென
நிரூபணமாயிருப்பதால்
நீயும் திரும்புவாய்
ஒருநாள்
உன் நிராகரிப்பை
நிராகரித்து.

உதவி

தனிமையில் கிடந்து
தத்தளிக்கிறேன்...
எப்பொழுதாவது
உதவி கரம்
நீட்ட வருகிறது
உன் நினைவு...!!

Monday, June 1, 2009

உன்னால்

உன் நினைவு நீறாவி ஆககூடாது
என்பதால்
உன் நிழலையும் படம்பிடித்தேன்
உன்னுடன் தினம் வாழ
நிஜ வாழ்வையும் கணவலையாய்
கடந்தேன்
சத்தம் இல்லாமல் சுவாசித்தேன்
உயிர் துடிப்பையும் உன் சங்கீதம்
ஆக்க
இன்று
கண்ணீருடன் பர்க்கிறேன் நான்
காகிதம் போல் கசக்கி எறிய பட்ட
என்னை ...

என்றும் நீ என்னோடுதானென்று

சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது

நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது

கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன

பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது

ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன

கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல் மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது

நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?என்றால்
பத்தோடு பதினொன்றாய்

வருமையும் சொன்னது
"என்றும் நீ என்னோடுதானென்று"

காதல் வடுக்கள்!!!

நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!

Tuesday, May 26, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

Love

Love
Isn't winning someone but loosing
Urself to someone.
When U r LOVED by someone its not
due to the excellence of Ur
mind but due to the purity of Ur heart..

கொள்ளாதே ...

நீ வேண்டாம் உன் காதல் போதும்
நான் அதில் என்னை கரைத்துக் கொள்வேன்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விடு போதும்..

மௌனம் அழகுதான் உனக்கு
அதனால் எப்போதும் அழுகைதான் எனக்கு

கொஞ்சம் சிரிக்கலாமே
உன் கத்திப் பார்வையினால்

உன் கண்கள்

உன் கண்களைக் கண்டால்
மீன் என்று சொன்னவர் யார்?
அவை என் ஊள்ளத்தைப்
பிடித்திழுக்கும் கொக்கியல்லவா?

அழகு

எனக்கும் சேர்த்து அழகாய் இருக்கிறாய் நீ!
உனக்கும் சேர்த்து அன்பாய் இருக்கிறேன் நான்!

கடைசி சந்திப்பு

நேரில் பார்த்து பேசாத
நாட்களை விடவும்,..

உன்னுடன் நெருங்கி
பழகிய,
சொல்லாதவைகளை
விடவும்,..

நீ என்னைவிட்டு
பிரிந்து சென்ற
'கடைசி சந்திப்பு'
கொடுமையானது,..

Sunday, May 24, 2009

வாழ்க்கை

வாழ்க்கை என்னும் கூட்டிலே .................
சுதந்திரம் இல்லாமல் சுற்றி திரிகிறேன் ............
என்றுதான் வெளி உலகம் காணுமோ .......
இந்த பறவை....
கடவுளுக்கே வெளிச்சம் ...........

தாலாட்டு



பொன்னெடுத்து நிறமெழுதி
பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

அறிவுக்குச் சூரியனாய்
அழகுக்குச் சந்திரனாய்
பொறுமைக்கு பூமியாய்
புகழுக்குப் பிறந்தவளாய்
வறுமைக்கு வள்ளலாய்
வீரத்துக்கு விஜயனாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!